தண்டு மாரியம்மனுக்கு 1,108 இளநீர் அபிஷேகம்
ADDED :3042 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், தண்டு முத்து மாரியம்மன் கோவிலில், 1,108 இளநீர் அபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், தண்டு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கத்திரி வெயில் முடிந்த பின், அம்மனுக்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் இளநீர் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று, வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பொழிந்து, பூமி குளிர்ச்சியடைய வேண்டி, அம்மனுக்கு, 1,108 இளநீர் அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.