உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக நடந்த ஆறு நாள் யாகம் நிறைவு

உலக நன்மைக்காக நடந்த ஆறு நாள் யாகம் நிறைவு

ஈரோடு: உலக நன்மைக்காக, ஆறு நாட்கள் நடந்த யாகம் நேற்று நிறைவடைந்தது. மும்பை சத்யத்யான வித்யாபீட குலபதி வித்யாஸிம் ஹாச்சார்யா சிஷ்யர், ரிக்வேத குருகுல பாடசாலை வேதமூர்த்தி, தாமோதர ஆச்சார் ஆகியோர் சார்பில், ஈரோடு கருங்கல்பாளையம் ரங்கபவனத்தில், உலக நன்மைக்காக சோமயாகம் நடந்தது. லட்சுமி நாராயணன் அருளோடு, அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்; மழை பெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூன், 9 முதல் நேற்று வரை, ஆறு நாட்கள் சோமயாகம் நடந்தது. 35 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த யாகத்தில், திருச்சி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், நாசிக், சிமோகா பகுதிகளில் இருந்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர். கணபதி பூஜை, இஷ்ட தேவதை மற்றும் குலதேவதை பிரார்த்தனை, யாகசாலை பிரவேஷம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சோமயாகம் நிறைவு நாளான நேற்று, மங்கள ஆரத்தியுடன் நிறைவு பெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !