சர்வலிங்கேஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி
ADDED :3081 days ago
பெருந்துறை: வெள்ளோடு, சர்வலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று உழவாரப் பணி நடந்தது. பெருந்துறை அடுத்த, வெள்ளோட்டில், ஈரோடு சாலையில் சர்வலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தனியார் துணிக்கடை சார்பில், உழவாரப்பணி நேற்று நடந்தது. கோவிலின் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், சுற்றுச்சுவர்கள், கோபுரங்கள், சன்னதிகளை தூய்மைப்படுத்தும் பணியில், துணிக்கடையை சேர்ந்த, 15 பேர் ஈடுபட்டனர். தூய்மை பணி காலையில் தொடங்கி மாலை வரை நடந்தது.