வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3080 days ago
சூரமங்கலம்: வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. சேலம், காமிநாயக்கன்பட்டியில், புதிதாக கட்டப்பட்ட வெக்காளியம்மன் கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள், கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றி, நடத்தி வைத்தனர். இதில், அம்மனை தரிசித்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீது, புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, 9:00 மணி முதல், மாலை, 3:00 வரை சிறப்பு அன்னதானம் நடந்தது.