தட்சிணாமூர்த்தி மடாலயம் புதிய மடாதிபதி நியமனம்
ADDED :3079 days ago
ஊட்டி: ஊட்டி காந்தள் தட்சிணாமூர்த்தி திருமடாலயத்துக்கு மடாதிபதி நியமிக்கப்பட்டார். ஊட்டி காந்தளில் தட்சிணாமூர்த்தி திருமடாலயம் உள்ளது. இதற்கான புதிய மடாதிபதி நியமிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆதீனம் சரவண மாணிக்க வாசக சுவாமிகள் தலைமை வகித்தார். சிவஸ்ரீ ராஜாபட்டர் முன்னிலை வகித்தார். இதில், திரு மடாலயத்திற்கு மடாதிபதியாக, சோமேஸ்வர சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார். அறங்காவலர் குழு உட்பட பலர் பங்கேற்றனர்.