செல்லியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ஊத்துக்கோட்டை : செல்லியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்ததில் இருந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. பூண்டி ஒன்றியம், அனந்தேரி கிராமத்தில், பொதுமக்கள் பங்களிப்புடன் செல்லியம்மன் கோவில் கட்டப்பட்டது. 48 நாட்கள் பணிகள் முடிந்து கடந்த மே 1ல், கும்பாபிஷேகம் நடந்தது. மறுநாளில் இருந்து, ஒரு மண்டலம், 48 நாட்கள் தொடர்ந்து பூஜை நடந்தது. 48 நாட்கள் நிறைவடைந்து, நேற்றுமுன்தினம், சிறப்பு பூஜை நடந்தது.முன்னதாக யாகம் வளர்த்து சிறப்பு பூஜையும், தொடர்ந்து கலச ஊர்வலம் நடந்தது.
அபிஷேகம்: பின், மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் மற்றும் கலச நீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.