வடுகநாதசுவாமி கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு: பக்தர்கள் திரண்டனர்
ADDED :3077 days ago
பல்லடம் : கணபதிபாளையம் வடுகநாதசுவாமி கோவிலில், காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் மலையம்பாளையம் பிரிவில் உள்ளது, வடுகநாத சுவாமி கோவில். மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதையொட்டி, பன்னீர், சந்தனம், பால், விபூதி, மற்றும் தேன் உள்பட பல்வேறு திரவியங்களால், பைரவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், அலங்கார பூஜை செய்யப்பட்ட பின், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும், அன்னதானம் வழங்கப்பட்டது. கணபதிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.