நெல்லீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :3077 days ago
கொளத்தூர்: நெல்லீஸ்வரர் கோவிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. கொளத்தூர் ஒன்றியம், மூலக்காடு பஞ்சாயத்து, அச்சங்காடு கிராமம் அருகே, வேதநாயகி சமேத நெல்லீஸ்வரர் கோவில் புதிதாக கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. பூஜை நிறைவு நாளான நேற்று, லிங்க வடிவில், 108 சங்குகளை வைத்து, சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதில், அச்சங்காடு மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.