உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளிப்பட்டி வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் முதல் ஞாயிறு பூஜை

காளிப்பட்டி வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் முதல் ஞாயிறு பூஜை

மல்லசமுத்திரம்: காளிப்பட்டி, வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு பூஜை நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலின் பின்புறத்தில், சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. தமிழ் மாதத்தில் வரும், முதல் ஞாயிற்றுக் கிழமையன்று, சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி ஆனி மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று, காலை, 9:00 மணியளவில், சிறப்பு பூஜைகள் நடந்தன. காளிப்பட்டி, முத்தனம்பாளையம், மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பலகிராமங்களில் இருந்து வந்த, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !