கோவில் சிலைகளை தாங்கும் ஆலமரம்
ADDED :3367 days ago
கருக்குப்பேட்டை : ஆல விழுதுகள் கோவில் வாகனங்களை செய்வதற்கு உதவுகிறது என, திம்மையன்பேட்டை கிராம வாசிகள் தெரிவித்தனர். வாலாஜாபாத் ஒன்றியத்தில், திம்மையன்பேட்டை ஊராட்சியில் கருக்குப்பேட்டை, திம்மையன்பேட்டை, வன்னியப்பேட்டை ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இதில், கருக்குப்பேட்டை மற்றும் வன்னியப்பேட்டை ஆகிய கிராமங்களில், பல நுாற்றாண்டுகள் வயதுடைய ஆலமரங்கள் உள்ளன. இம்மரங்களில் இருக்கும் விழுதுகளை, கிராமவாசிகள் மண் அணைத்து வேர் பகுதிக்கு பலப்படுத்துகின்றனர். அவ்வாறு பலம் சேர்க்கப்பட்ட ஆல விழுதுகள் பருமனான பிறகு, கோவில் வாகனங்களை செய்வதற்கு வெட்டி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.