உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அலங்கார அபிேஷக பூஜைகள் நடந்தன. சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியன்று, கால பைரவருக்கு, பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. பின், சுவாமிக்கு ரோஜா, வடை மாலைகள் சாத்தப்பட்டன. பக்தர்கள் பூசணி, எலுமிச்சை, கார்த்திகை போன்றவற்றில் விளக்கு வைத்து கால பைரவரை வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !