நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
ADDED :3077 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது. கோவிலில், கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவாக தீ மிதி விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, மாலை அபிஷேகம் முடிந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பூசாரிகள் சேகர், கணேஷ் பூங்கரகத்துடன் முதலில் தீ மிதித்தனர். அதனைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.