உத்திரமேரூர் கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல்
ADDED :3078 days ago
உத்திரமேரூர்: சிறுமையிலுாரில், கங்கையம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா, சிறப்பாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், சிறுமையிலுார் கிராமத்தில் உள்ளது கங்கையம்மன் கோவில். கூழ்வார்த்தல் திருவிழாவையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை காப்புகட்டப்பட்டது. நேற்று முன்தினம், அப்பகுதி விநாயகர் மற்றும் அனைத்து அம்மன் கோவில்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை , 10:00 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், வீதிகளில் ஊர்வலமாக வந்தார். அப்போது, கங்கையம்மனுக்கு தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபட்டனர். அதை தொடர்ந்து, கோவிலில் கூழ்வார்த்தல் விழா சிறப்பாக நடைபெற்றது.