புனித அந்தோணியார் சர்ச்சில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED :3078 days ago
மேட்டுப்பாளையம் : புனித அந்தோணியார் சர்ச்சில், நேற்று தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது. பங்கு பாதிரியார் ஜார்ஜ் ரொசாரியோ தலைமையில், தருமபுரி சோகத்துார் கார்மல் தியான ஆசிரமம் பாதிரியார் ஸ்டீபன் தட்சில், தியான திருப்பலி நிறைவேற்றி நற்கருணை ஆராதனை வழங்கினார். புனித அந்தோணியார் உருவம் பதித்த கொடியை ஏற்றினார். இன்று முதல் வரும், 24ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் மாலை, 6:00 மணிக்கு பாதிரியார்கள் திருவிழா திருப்பலியும், நவநாள், அருளுரை, நற்கருணை ஆராதனை வழங்க உள்ளனர். தினமும் தேர்ப்பவனி உள்ளது. வரும், 25ம் தேதி காலை, 8:30 மணிக்கு கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ், திருவிழா திருப்பலியை நிறைவேற்ற, சிறுவர், சிறுமியருக்கு முதல் நற்கருணை அருட்சாதனம் வழங்க உள்ளார். அன்று மாலை, 7:00 மணிக்கு திருப்பலியும், அலங்கார தேர்பவனியும் நடைபெற உள்ளது.