துார் வாரும் போது கிடைத்த சிலை
ADDED :3078 days ago
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே குளம் துார் வாரும் போது,பொன்னியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. நேத்தப்பாக்கம் கிராமத்தில், இரண்டு நாட்களுக்கு முன், நுாறு நாள் திட்டப்பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள குளத்தை துார் வாரி செப்பனிட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்தக் குளத்தில், பொன்னியம்மன் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த, மதுராந்தகம் வட்டாட்சியர் கற்பகம், சிலையை கைப்பற்றி, சார் கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.