உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் அறை முன்பதிவை தெரிவிக்க வேண்டும்

பழநி கோயிலில் அறை முன்பதிவை தெரிவிக்க வேண்டும்

பழநி: பழநிமுருகன்கோயில் தங்கும் அறைகளின் முன்பதிவு, காலியாக உள்ள அறைகள் விபரங்களை பக்தர்கள் தெரிந்துகொள்ள விடுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

பழநி வட்டார நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மைய தலைவர் பழனிச்சாமி தலைமைவகித்தார். பொருளாளர் ராஜசேகர், இணை செயலாளர் போஸ்ராஜன் முன்னிலைவகித்தனர். பழநி சப்கலெக்டர் முன்னிலையில் பொதுவினியோக திட்ட ஆலோசனை கூட்டம் மாதந்தோறும்நடத்தவேண்டும். ரேஷன்பொருட்கள் வாங்காமல் சிலருக்கு வாங்கியதாக எஸ்.எம்.எஸ்., வருகிறது, மோசடி விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி முருகன் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதிகளில் அறைகள் எடுக்கும் முறை ‘ஆன்லைன்’ முன்பதிவு நடைமுறையில் உள்ளது. காலியான அறைகள் குறித்த விபரத்தை, அறிந்துகொள்ளும் வகையில் விடுதிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் வீரபுத்திரன், துணை தலைவர்கள் நல்லமுத்து, மணிவண்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !