உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோவிலில் கலச, பாலஸ்தாபன பூஜை

காசி விஸ்வநாதர் கோவிலில் கலச, பாலஸ்தாபன பூஜை

பவானி: பவானி சின்னகோவில் என அழைக்கப்படும், காசிவிஸ்வநாதர் கோவிலில், பாலஸ்தாபன மற்றும் திருப்பணி துவக்க விழா நடந்தது. பவானி, காவிரி வீதியிலுள்ள விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து, 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், பாலஸ்தாபன மற்றும் திருப்பணி துவக்க விழா நேற்று முன்தினம் துவங்கியது. இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு கலச பூஜை, பாலஸ்தாபன பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், பவானி நகர முக்கிய பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !