அய்யப்பன் கோவில் பாலாலயம் விழா
ADDED :3077 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூர் அய்யப்பன் கோவில், கடந்த, 1965ல் கட்டப்பட்டு, தற்போது கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அதன்படி, கோவிலை புனரமைப்பு செய்ய முதற்கட்டமாக பலாலய துவக்க விழா, 108 திரவிய ஹோம பூஜையுடன் துவங்கின. நேற்று நடந்த இரண்டாம் கால பூஜையில், யாக சாலையில் இருந்து கடங்கள் பாலாலய கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின், மகா தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. சிம்மபுரிஸ்வரார் கோவில் சிவாச்சாரியர் செங்குட்டுவேல் தலைமையில் பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். லாலாப்பேட்டை, கருப்பத்தூர், குளித்தலை, கள்ளப்பள்ளி, சிந்தலவாடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.