உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனகிரி பெருமாள் கோவிலில் துாய்மைப்படுத்தும் பணி

புவனகிரி பெருமாள் கோவிலில் துாய்மைப்படுத்தும் பணி

புவனகிரி: புவனகிரி அருகே பா.ஜ., சார்பில் பெருமாள் கோவிலில் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது. புவனகிரி நகர பா.ஜ., சார்பில் ஆதிவராகநத்தம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் வளாகப்பகுதி முழுவதும் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது. நகர தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு கனகராஜன், நெசவாளர் பிரிவு தலைவர் கோவிந்தசாமி, முன்னிலை வகித்தனர். துாய்மைப்படுத்தும் பணியை மாவட்ட துணைத் தலைவர் விஜயரங்கன் துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் ஜோதிராஜ், நகர நிர்வாகிகள் நாகராஜன், ரமேஷ், கலாவதி செல்வராஜ், பாண்டியன், ராஜராஜன், கேசவன், கரிகாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !