பொன்னியம்மன் கோவிலில் 25ல் கும்பாபிஷேகம்
ADDED :3074 days ago
ஊத்துக்கோட்டை : கிராம தேவதை பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 25ல் நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம் கிராமத்தில் உள்ளது பொன்னியம்மன் கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர் கள் பங்களிப்புடன் கோவில் சீரமைக்கும் பணி நடந்தது.பரிவார தேவதைகள், சப்த கன்னியர்கள், விமான கோபுரம் ஆகியவற்றிற்கான பணிகள் முடிந்து, வரும், 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.