நடராஜர் பெயர் காரணம்
ADDED :3071 days ago
சிவனின் நடனம் காண வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற முனிவர்கள் தவமிருந்தனர். அவர்களுக்கு சிவன் ஆனந்த தாண்டவம் ஆடி காட்டினார். இதை பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, தில்லை வாழ் அந்தணர்கள் ரசித்தனர். சிவன் அருகில் பார்வதியும் நின்று விருப்பமாக ரசித்தாள். இதனால் சிவகாமி என்ற பெயர் அவளுக்கு ஏற்பட்டது. இதை விட சிறந்த நடனத்தை யாராலும் ஆட முடியாது என்பதால், நட ராஜர்(ஆடல் அரசன்) என்னும் பெயர், சிவனுக்கு சூட்டப்பட்டது.