எதிரியிடமும் அன்பு
சாலையில் நடந்து செல்கிறீர்கள். எதிரே வேண்டாத ஒருவன் வந்து உங்களை இடித்து விட்டான் என்றால் என்ன செய்வீர்கள்? ஏண்டா, கண்ணு தெரியலே! வேணு மினே இடிச்சுட்டு போறே. வம்பு இழுக்கிறியா?என்று கேட்டு சண்டை போடுவீர்கள். சில சம யங்களில் கைகலப்பு கூட வந்து விடும். ஆனால், நபிகள் நாயகம் இது போன்ற சமயங்களில் பொறுமையாக இருப்பார். ஒருநாள் நாயகம் தெருவில் நடந்து சென்ற போது, எதிரி ஒருவன் வேக மாக வந்தான். நாய கத்தின் மீது மண்ணை வாரி இறைத்தான். நாயகம் எதுவும் பேசவில்லை. அமைதியாக வந்து விட்டார். இதைக் கண்ட, அவரது மகள் பாத்திமா அம்மையார் மனம் கலங்கி, தந்தையின் உடலைப் பாசத்தோடு கழுவி விட்டார். உங்களை எதிரிகள் என்ன செய்வார்களோ? தெரியவில்லையே,என அழுதார். அப்போது நாயகம்,எதற்காக அழுகிறாய். உன் தந்தையை இறைவன் காப்பாற்றுவான், என்றார். தனக்கு துன்பம் செய்த எதிரியை நாயகம் திட்டக் கூட செய்ய வில்லை. அந்தளவுக்கு பொறுமையாக நடந்து கொண்டார். தன் எதி ரிகளை கவனிக்கும் பொறுப்பை இறைவனிடம் விட்டு விட்டார்.