ஆண்டிபட்டி சற்குரு சுவாமிகள் 107ம் ஆண்டு குருபூஜை
ADDED :3065 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலாபுரத்தில் சற்குருசுவாமிகள் 107ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. சுவாமிகள் 107 ஆண்டுக்கு முன் தெய்வநிலை அடைந்தார். அதன் நினைவாக ஊர்மக்கள் சார்பில் ஆண்டுதோறும் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. எடப்பள்ளி சித்தகிரி மடம் மல்லையசாமி கொடியேற்றினார். மூன்று நாட்கள் விழாவில் கணே சபூஜை, பஜனை, ஆன் மிக சொற்பொழிவுகள் நடந்தது. சற்குரு சுவாமியின் படத்தை அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் வைத்து கிராமத்தின் வீதிகள் வழி யாக ஊர்வலம் சென்றனர் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மிகவாதி கள், மடாதிபதிகள் பங்கேற்று பூஜை, வழிபாடுகள் செய்தனர். கோயில் வளா கத்தில் அன்னதானம், வஸ்திரதானம் வழங்கும் நிகழ்வும் நடந்தது.