உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரப்பரையில் மழை வேண்டி வருணஜபம்

மரப்பரையில் மழை வேண்டி வருணஜபம்

மல்லசமுத்திரம்: மரப்பரையில் மழை வேண்டி வருண ஜபம் மற்றும் யாக பூஜைகள் நடந்தன. திருச்செங்கோடு தாலுகா, வையப்பமலை அடுத்த, மரப்பரை கிராமத்தில், பழமை வாய்ந்த நாகேஸ்வரர், சிவகாமி அம்மாள் கோவில்கள் உள்ளன. இங்கு, மழை வேண்டி வருண ஜபம் மற்றும் யாகபூஜைகள் நடந்தன. விநாயகர், கோ பூஜை, கலசங்கள் ஆலாஹனம், திவ்யாகுதி, வருணஜபம், மஹாபி?ஷகம், அலங்கார மஹா தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !