தேவகோட்டை கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
ADDED :3061 days ago
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா நேற்று காலை கொடியேற்றதுடன் துவங்கியது. சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகிஅம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகளை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடந்தது. தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் தேவஸ்தான கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் கிராமத்தினர் பங்கேற்றனர்.