உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில், ஆனி திருமஞ்சன தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில், ஆனி திருமஞ்சனம் திருவிழாவில், ஒன்பதாம் நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சித்சபையில் இருந்து, தேரில் நடராஜர் எழுந்தருளினார். காலை, 7:45 மணிக்கு, விநாயகர், சுப்ரமணியர், ஆனந்தநடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மாலை, 4:00 மணிக்கு, பருவதராஜ குருகுல சமூகத்தினரின் முதல் மரியாதைக்கு பின், மாலை, 6:00 மணிக்கு, கீழ் சன்னதி நிலைக்கு தேர் வந்தடைந்தது. தேரில் இருந்து இறங்கிய சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜரை, மாணிக்கவாசகர் எதிர்கொண்டு அழைத்துச் செல்லும் வைபவம் நடந்தது. பின், ஆயிரங்கால் மண்டபம் முன் எழுந்தருளி சுவாமி அருள்பாலித்தார். இரவு, லட்சார்ச்சனை நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, சுவாமி திருவாபரண அலங்காரத்தில் ராஜசபையில் அருள்பாலிக்கிறார். மதியம், மகா தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !