அழகர்கோவில் மலையில் கற்களை அடுக்கி பெண்கள் வினோத வழிபாடு
ADDED :3058 days ago
அழகர்கோவில், மதுரை அழகர்கோவில் மலையில் கற்கள் மீது கற்களை அடுக்கி பெண்கள் வினோத வழிபாடு நடத்துகின்றனர். மலைப்பாதையின் இருபுறமும் கற்கள் மீது கற்களை அடுக்கி பெண்கள் வினோத வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். நுாபுர கங்கையில் நீராடி விட்டு திரும்பும் பெண்கள் கற்களை அடுக்கி வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கற்களை அடுக்கும் பெண்களை பார்த்து, சிலர் தாங்களும் கற்களை அடுக்கி விட்டு அதற்காக காரணம் கேட்கின்றனர். அடுக்குவதற்கு கற்கள் கிடைக்காமல் காட்டுக்குள் சென்று சேகரித்து வருவோரும் உண்டு. நுாபுர கங்கையில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் கற்களை அடுக்கி வழிபட்டால் வீடு கட்டலாம்; வீடுகளில் சுப காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை என்கின்றனர் பக்தர்கள்.