மாயூரநாத சுவாமி ஆனி விழா துவக்கம்
ADDED :3058 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் பெத்தவநல்லுார் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ராஜபாளையத்தில் பழமைவாய்ந்த இந்து சமய அறநிலையத்துறையினரால் நிர்வகிக்கப்படும் இக்கோயில் கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பரிவார மூர்த்திகளுக்கு பூஜைகளுடன் கணபதி, துர்க்கை, முருகன், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பைரவருக்கும் பூஜைகள் செய்யப்பட்டன. கொடிமரத்திற்கு 9 வகையான அபிேஷகங்கள், தீபாராதனை நடந்தது. 9ம் விழாவான ஜூலை 7 அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி விதவிதமான அலங்காரங்களுடன் வீதி உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செந்தில் வேலவன், செயல் அலுவலர் அறிவழகன் தக்கார் ராமராஜா செய்துள்ளனர்.