தர்மபுரி கோவில்களில் ஆனிதிருமஞ்சன திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :3058 days ago
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமி பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் நடந்த, ஆனிதிருமஞ்சன திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி, குமாரசாமி பேட்டை சிவசுப்பிர மணியசுவாமி கோவிலில் சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமிக்கு, ஆனி திருமஞ்சன விழா கடந்த, 28ல் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மஹா அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது. 9:30 மணிக்கு உற்சவருக்கு பல்வேறு வகையான பழங்கள் மற்றும் இளநீர், பால், வெட்டி வேர் ஆகியவற்றின் மூலம் அபி?ஷகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு திருஆபரண காட்சியுடன் அம்மையப்பன் திரு நடன திருவீதி உலா, கோபுர தரிசனம் ஆகியவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.