உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சனம்

சேலம் சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சனம்

சேலம்: சேலம் மாவட்ட சிவன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. ஆனி திருமஞ்சனத்தையொட்டி, சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று, நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு, அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின், சுவாமிகள் கோவில் வளாகத்திற்குள் அழைத்து வரப்பட்டன. அதேபோல், குகை அம்பலவாணர், செவ்வாய்ப்பேட்டை காசி விஸ்வநாதர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது. மேலும், தீர்த்தம் தெளித்து, சிவாச்சாரியார்கள் ஆசிர்வாதம் வழங்கினர். பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதியொட்டி உள்ள ஆட்கொண்டேஸ்வரர் ஆலயத்தில், உற்சவ மூர்த்திகளான நடராஜர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மேல், உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், தேன், கரும்புச்சாறு, இளநீர், பழவகைகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில், மூலவர் ஆட்கொண்டேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் ஆலயம், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி கருணாகரேஸ்வரர் ஆலயம், தேன்மலை சிவாலயங்களில், சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !