வட மதுரகாளி அம்மனுக்கு கும்பாபிஷேகம்
ADDED :3057 days ago
கூடப்பாக்கம்: கூடப்பாக்கம், வடமதுரகாளி அம்மன் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, கூடப்பாக்கம் முன்னாள் ராணுவ குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது, வட மதுரகாளி அம்மன் கோவில். இங்கு, மகா கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை , கணபதி ஹோமமும், விக்னேஸ்வர பூஜையும் நடந்தது. மாலை , 5:30 மணிக்கு, முதல் காலயா கசாலை பூஜை நடந்தது. நேற்று காலை, இரண்டாம் கால யாக சாலையும், நாடி சந்தானமும் நடந்தது. காலை, 9:00 மணிக்கு கடம் புறப்பாடும், 9:30 மணிக்கு, புதிய ராஜ கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து வட மதுரகாளி அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடந்தது. இரவு, சிறப்பு மலர் அலங்காரத்தில் மதுரகாளி அம்மன் வீதியுலா நடந்தது.