கோட்டை அரங்கநாதர் கோவிலில் சுதர்சன ஹோமம்
ADDED :3057 days ago
ஈரோடு: உயிரினங்கள் சுபிட்சமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில், சக்கரத்தாழ்வார் நட்சத்திரத்தை முன்னிட்டு, ஈரோடு, கோட்டை அரங்கநாதர் கோவிலில், சுதர்சன ஹோமம் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் ஹோமத்தில், நேற்று திவ்ய பிரபந்த, வேத பாராயணம், சுதர்சன மூல மந்திரம், காயத்ரி மந்திரம் மால மந்திர ஜபம் நடந்தது. அதைத் தொடர்ந்து லட்ச ஆவர்த்தி ஹோமம், பூர்ணாகுதி, சாற்றுமறை, தீபாராதனையுடன் முதற்கால யாகம் முடிந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.