உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே, கணக்கம்பாளையம் ஊராட்சி, தாண்டாக்கவுண்டம் புதூரில் உள்ள ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 27ல் துவங்கியது. நேற்று முன்தினம் பூர்ணாகுதி, ஸ்ப்த தச கலச திருமஞ்சனம், விமான கலச ஸ்தபானம் நடந்தது.நேற்று காலை, 5:30 மணிக்கு சுப்ரபாதம், த்வார பூஜை, சோம கும்ப, பாலிகா கும்ப, மண்டல, பிம்ப ஆராதனம், ஹோமம், தத்வஹோமம், ந்யாசம், சாந்தி ஹோமம், ப்ராயச்சித்த ஹோமம், மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம் நடந்தது. அதை தொடர்ந்து மூலவர், உற்சவர், பரிவார தெய்வங்களுக்கு, காலை, 9:15 மணிக்கு மேல், 10:15க்குள், மகா சம்ப்ரேஷணம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசித்தனர்.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, திருவாராதனம், நிவேதனம், சாற்றுமுறை தீர்த்த பிரசாத வினியோகம், ஆசார்ய யஜமாந பஹீமானம் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !