அனந்தீஸ்வரன் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்
ADDED :3055 days ago
சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு பூஜை நடந்தது. திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு ேஹாமம் நடைபெற்று, சிவகாம சுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.இதனைத் தொடர்ந்து பன்னிரு திருமுறை பாடல்கள் பாடி சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.