உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து முனியப்பன் கோவில் குடமுழுக்கு

முத்து முனியப்பன் கோவில் குடமுழுக்கு

வெண்ணந்தூர்: புதுப்பாளையம், முத்து முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ராசிபுரம் அடுத்த, ரா.புதுப்பாளையத்தில் முத்து முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, யாககால பூஜைகள் துவங்கின. நேற்று அதிகாலை கலச புறப்பாடு மற்றும் கும்பாபிஷேக விழா நடந்தது. கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அபி?ஷகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !