உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் தேர்த் திருவிழா

கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் தேர்த் திருவிழா

மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், திருத்தேர் பெருவிழா நடந்தது. மோகனூரில், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், தேர்த்திருவிழாவுக்கு, விழா குழுவினர் ஏற்பாடு செய்தனர். திருத்தேர் புதிதாக தயார் செய்யப்பட்டது. கடந்த, 21 முதல், நாள்தோறும் காலை, பல்லக்கு புறப்பாடு, இரவு, சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, சுவாமி ரதாரோஹனம், காலை, 9:00 மணிக்கு, தேர் வடம் பிடித்து இழுத்தல் நடந்தது. தொடர்ந்து, சிறிய தேர், பல்வேறு வீதிகள் வழியாக பக்தர்களால் இழுத்துவரப்பட்டு, கோவிலில் நிலை அடைந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !