ஐயப்பன் கோவிலில் மாலையணிந்த பக்தர்கள்!
ADDED :5081 days ago
ஈரோடு: ஈரோடு காவிரியாற்றில் நேற்று, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்து, ஸ்வாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை முதல் நாளான நேற்று, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரியாற்றில் நேற்று அதிகாலை மூன்று மணி முதலே, ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். ஆற்றில் புனித நீராடி, ஆற்றங்கரையிலேயே, ஐயப்ப கோஷம் முழங்க, துளசி மாலையை, பக்தர்களுக்கு, குருசாமிகள் அணிவித்தார். கருங்கல்பாளையம் ஐயப்பா சேவா நிறுவன கோவிலில், நேற்று, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் துவக்கினர். ஐயப்பன் கோவிலில், நேற்று புஷ்பாஞ்சலி நடந்தது. பவானி கூடுதுறையிலும், ஏராளமான பக்தர்கள் குவிந்து, ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டனர்.