நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3025 days ago
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் ஹஸ்த தாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது.தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. நேற்று சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இன்று முக்கிய நிகழ்ச்சியான நடனபாதேஸ்வரர் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. 5 ம் தேதி காலை ரதஉற்சவமும் 6 ம் தேதி நடராஜர் தரிசனமும் 13 ம் தேதி தெப்பல் உற்சவமும் நடக்கிறது.