கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் அன்ன பூஜை
ADDED :3023 days ago
நாகர்கோவில்: சுவாமி விவேகானந்தரின், 115-வது நினைவு தினத்தை ஒட்டி, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் அன்ன பூஜை நடந்தது. சுவாமி விவேகானந்தர், 1902 ஜூலை, 4ல் மகாசமாதி அடைந்தார். அவரது, 115-வது நினைவு தினம் நேற்று, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்தது. இதற்காக, 23 டன் அரிசியை மலை போல் குவித்து, அதில் அலங்காரம் செய்து, சுற்றிலும் குத்துவிளக்கேற்றி, அன்னபூரணி சிலை வைத்து, பெண்கள் பூஜை நடத்தினர். அன்னபூரணி ஸ்தோத்திரம் பாடப்பட்டது. தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில், பகவத்கீதை படித்து, விஸ்வரூப தரிசனம் நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.