உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளாத்தீஸ்வரர் கோயிலில் தொல்லியல்துறையினர் விரைவில் ஆய்வு

காளாத்தீஸ்வரர் கோயிலில் தொல்லியல்துறையினர் விரைவில் ஆய்வு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உட னுறை ஞானாம் பிகை கோயில் திருப்பணி மற்றும் கும்பா பிேஷகம் நடத்துவதற்கு முன்னதாக தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக சில நாட்களில் அவர்கள் வர உள்ளனர் என செயல்அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில்மிகவும் பழமையானது, பிரசித்திபெற்றதுமாகும். தென்காளஹஸ்திஎன்ற பெயர் பெற்றது. ராகு கேது தோஷ பரிகார தலமாகவும் உள்ளது.இங்குள்ள ராகு கேது தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இக்கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடந்து பல ஆண்டுகளைகடந்து விட்டது. அதனை நடத்த வலியுறுத்தி பா.ஜ., வினர் போராட்டம் நடத்தினர். ஆனால்பழமையான கோயில்களை திருப்பணி செய்ய வேண்டும் என்றால்தொல்லியல் துறை ஆய்வு செய்து அனுமதி தர வேண்டும் என்றுசட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அறநிலையத்துறை அதிகாரிகள் தொல்லியல்துறைக்கு கடிதம் எழுதினர். அதற்கு பதிலளித்துள்ள தொல்லியல் துறையினர் இன்னமும் சில நாட்களில் கோயிலில்ஆய்வு மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அனுமதிதருவதாக கடிதம்அனுப்பி உள்ளனர். கோயில் செயல்அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ”இணைமற்றும் துணை ஆணையர்களின் வேண்டுகோளை ஏற்றுதொல்லியல் துறை அதிகாரிகள் இன்னும் சில நாட்களில் கோயிலைஆய்வு செய்து, அனுமதி தருவதாக கூறியுள்ளனர். அதற்குபிறகு திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் செய்து தொடர்பாகமுடிவு செய்யப்படும்,,’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !