விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவிலில் ஆஷாட ஏகாதசி உற்சவம்
ADDED :3024 days ago
விட்டிலாபுரம்: விட்டிலாபுரம் பாண்டு ரங்கர் கோவிலில், ஆஷாட ஏகாதசி உற்சவம், கோலாகலமாக நடந்தது. கல்பாக்கம் அடுத்த, விட்டிலாபுரத்தில், விட்டல் பாண்டுரங்கர் கோவில் உள்ளது. விஜயநகர ஆட்சியின் போது கட்டப்பட்ட இக்கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. வைணவ கோவில்களில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை போன்று, ஆனி மாத ஏகாதசி நாளை, இக்கோவிலில் ஆஷ்ட ஏகாதசி உற்சவம் என வழிபடுகின்றனர். இந்நாளான நேற்று, ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பாண்டுரங்க சுவாமிக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சுவாமி, அவரது பக்தர்களின் லீலைகள் குறித்து, முரளிதரசுவாமி கீர்த்தனை பாடி, உபன்யாசம் செய்தார். பக்தர்கள் ஏராளமானோர், சுவாமியை வழிபட்டு ரசித்தனர்.