ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் சன்னதியில் புராணம் வாசித்தல்
                              ADDED :3042 days ago 
                            
                          
                          ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் சன்னதியில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தின்,11ம் திருநாளை முன்னிட்டு தொட்டாச்சாரியார் மண்டபத்தில் பெரியாழ்வார், பெரியபெருமாள் மற்றும் பூமாதேவி, ஸ்ரீதேவி எழுந்தருளினர். அங்கு ஸ்ரீனிவாசபட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். வேதபிரான் சுதர்சன் புராணம் வாசித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். செயல் அலுவலர் ராமராஜா மற்றும் பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.