காஞ்சி ஜெயேந்திரர் பழநி முருகன் கோயிலுக்கு தங்க பூணுால் வழங்கி வழிபாடு
ADDED :3039 days ago
பழநி : காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், பழநி முருகன்கோயிலுக்கு 12கிராம் தங்க பூணுால் வழங்கி, சிறப்பு வழிபாடு செய்தார். பழநிக்கு நேற்று முன்தினம் வந்த ஜெயேந்திரர், அடிவாரம் தனியார் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நேற்று காலை 6:00 மணிக்கு வின்ஞ் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார். அங்கு படிக்கட்டில் ’டோலி’யில் சென்றார். அதன் பின் பேட்டரி கார் மூலம் வெளிப்பிரகாரத்தை வலம் வந்தார். இணை ஆணையர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். ஜெயேந்திரர் 12கிராம் தங்க பூணுால் வழங்கி, கால பூஜையில் முருகனை வழிபட்டார். பக்தர்களுக்கு குங்குமப்பிரசாதம் வழங்கினார்.