உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்மனாபசுவாமி கோயிலில் ’பி’ கருவூல அறையை திறப்பதில் சிக்கல்கள்

பத்மனாபசுவாமி கோயிலில் ’பி’ கருவூல அறையை திறப்பதில் சிக்கல்கள்

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலில் ’பி’ கருவூல அறையை திறக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள் ளது. மன்னர் குடும்ப எதிர்ப்பும், தேவபிரஸ்ன முடிவும், அதன் பாதுகாப்பு முறையும் திறப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயிலில் ஆறு கருவூல அறைகள் உள்ளன. இதில் ’பி ’அறையை தவிர அனைத்து அறைகளும் பல கட்டங்களாக திறக்கப்பட்டு விட்டது. இ,எப்., என்ற இரண்டு அறைகளும் நித்ய பூஜைகளுக்காக தினமும் திறக்கப்படும் அறைகளாகும். சி மற்றும் டி அறைகளில் திருவிழா காலங்களில் சுவாமிக்கு போடப்படும் நகைகள் பாதுகாக்கப்படுகிறது. எ மற்றும் பி அறைகளில்தான் கோயிலுக்கு உரிய அதிக தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் உள்ளன. அனந்தசயன விக்ரகத்தின் தலை பகுதியில் ஸ்ரீபண்டாரம் என்ற பெயரில் ’எ’ கருவூல அறையும், மகாபாரத கோணத்தில் ’பி’ என்ற கருவூல அறையும் அமைந்துள்ளது. ’எ’ கருவூல அறையில் கணக்கு எடுக்கப்பட்ட போது ரூபாய் ஒன்றே முக்கால் லட் சம் கோடி மதிப்பிலான தங்க புதையல் எடுக்கப்பட்டது. இதில், தங்கநகைகள், தங்க விக்ரகங்கள், தங்க கட்டிகள் இருந்தன.ஆனால் ’பி’ கருவூல அறையை திறக்க மன்னர் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்த அறையை திறப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுவருகிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், மன்னர் குடும்ப எதிர்ப்பையும் மீறி, அந்த அறையை திறக்க முயன்ற போது, அதன் மூன்றாவது இரும்பு கதவை திறக்க முடியாமல் முயற்சி தோல்வி அடைந்தது. முதல் இரண்டுகதவுகளை திறந்தபோது வெள்ளி கட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கோயிலின் சொத்துக்களை முழுமையாக மதிப்பிட ’பி’ அறையை திறக்க வேண்டும் என்றும், இதற்காக மன்னர் குடும்பத்துடன் பேச வேண்டும்என்றும் அமிக்கஸ்கியூரிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள் ளது. இதற்கு மன்னர் குடும்பம் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும் அடுத்த விசாரணையின் போது மன்னர் குடும்பம் சார்பில் வாக்கு மூலம் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.’பி’ அறையின் கருங்கல் தடுப்பையும், இரும்பு கதவையும் உடைப்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. வெடி வைத்து தகர்க்கவும் முடியாது. காரணம் அது கோயில் மூலஸ் தானத்தை பாதிக்கும். மன்னர் காலத்தில் வெளிநாட்டுடன் வர்த்தக உறவு இருந்தது. வெளிநாட்டில் இருந்து கிடைத்த தங்க, வெள்ளி நாணயங்கள் இந்த அறையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுபோல கோயில் வருமானம் தங்க கட்டி யாக மாற்றப்பட்டு, கோயிலிலேயே பாதுகாக் கப்பட்டு வந்தது. இவை எல்லாம் ’பி’ அறையில் இருக்கும் எனத் தெரிகிறது. பத்மனாபசுவாமி கோயிலின் ’பி’ அறை, தற்போது எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்துள்ளது. - நமது சிறப்பு நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !