உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் கிராமத்தில், மாரியம்மன், காளியம்மன், மலையாளசுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள், மூன்று கால ஹோம பூஜையில் அபிஷேகம், ஆராதனை செய்தனர். நேற்று காலை, 10:10 மணியளவில் கோவில் கலசத்திற்க்கு புனித நீர் ஊற்றப்பட்டது. குளித்தலையை சுற்றியுள்ள பொது மக்கள், தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !