உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுநாராயணப் பெருமாள் பிரம்மோற்ஸவ விழா துவக்கம்

சேதுநாராயணப் பெருமாள் பிரம்மோற்ஸவ விழா துவக்கம்

வத்திராயிருப்பு:  வத்திராயிருப்பில் பிரசித்தி பெற்ற சேதுநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா கருட கொடியேற்றத்துடன் துவங்கியது.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்ஸவ விழா 7 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  சுவாமியின் அருள்பெறுவதற்காக நடத்தப்படும் இத்திருவிழாவில் சுவாமிக்கு தினமும் 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளல் நடைபெறும்.   இந்நிகழ்வில் பல்வேறு வாகனங்களி்ல் சுவாமி எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.   கோயில் முன்பு அமைக்கப்பட்ட ஆண்டாள் அரங்கில் சுவாமி தினமும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருள்வார்.  அவர்களுக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடத்தப்படும்.  பெண்கள் திரளாக கலந்து கொண்டு வழிபடுவார்கள்.  விழாவின் முக்கிய நிகழ்வாக 5ம் நாளி்ல் சுவாமி, தாயார்களுடன் திருக்கல்யாண வைபவமும், 6 ம் நாளில் திருத்தேர் வீதியுலாவும் நடைபெறும்.  பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபடுவார்கள்.  பல சிறப்புகளை கொண்ட இத்திருவிழா கருட கொடியேற்றத்துடன் துவங்கியது.  முன்னதாக  கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.  பக்தர்கள் வழிபாட்டிற்கு பின் மேளதாளங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.  பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !