பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா துவக்கம்
சிவகங்கை: சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 63வது பூச்சொரிதல் விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு காப்பு கட்டுதல், அம்மனுக்கு துாயதீப அலங்கார நெய்வேத்தியம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து கோயிலுக்கு பூக்கரகம், தீச்சட்டி எடுத்து வரப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தினமும் மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக வழிபாடு நடக்கிறது. ஜூலை 9ல் கோயில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடக்கிறது. ஜூலை 14 காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிேஷகம், அலங்கார நெய்வேத்தியம் நடக்கும். மாலை 4:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் குழந்தையுடன் அருள்பாலிப்பார். தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடக்கும். பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல், பிள்ளைத் தொட்டி காட்டுதல், முடி இறக்குதல் போன்ற நேர்த்திகடன்களை பக்தர்கள் செய்வர். ஏற்பாடுகளை பூஜாரி பூமிநாதன், தக்கார் இளங்கோவன் செய்து வருகின்றனர்.