உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கின்னஸில் இடம் பிடித்த ஆந்திர லட்டு

கின்னஸில் இடம் பிடித்த ஆந்திர லட்டு

ஐதராபாத்: ஆந்திராவில் சமீபத்தில் நடந்த விநாயகர் திருவிழாவிற்கு தயார்‌ செய்யப்பட்ட 5,570 கிலோ லட்டு கின்னஸில் இடம் பெற்றது. விசாகபட்டினத்தில் நடந்த 21 நாள் திருவிழாவிற்காக விநாயகர் உருவம் ‌கொண்ட 117 அடி உயரத்தில் அந்த லட்டு தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை 50 பேர் ஒன்று சேர்ந்து ஒரு வார காலத்தில் தயார் செய்துள்ளனர். ஏற்கனவே 551 கிலோவில் தயாரான லட்டே சாதனையாக இருந்தது குறிப்பி‌டத்தக்கது. அந்த லட்டு பிரிட்டனில் உள்ள இந்து கோவிலில் தயாரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !