திருமலை அகரத்தில் ஊரணி பொங்கல்
ADDED :3162 days ago
பெண்ணாடம்: திருமலை அகரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். பெண்ணாடம் திருமலை அகரம் மாரியம்மன் கோவிலில் ஆனி மாத திருவிழா, கடந்த 3ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நேற்று பகல் 11:00 மணியளவில் சாகை வார்த்தல் நடந்தது. இன்று மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.