உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூளி அம்மன் கோவிலில் திருவாட்சி விழா விமரிசை

தூளி அம்மன் கோவிலில் திருவாட்சி விழா விமரிசை

பொன்னேரி:துாளி அம்மன் கோவிலில், திருவாட்சி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி அடுத்த, பெரவள்ளூர் கிராமத்தில், துாளி அம்மன் கோவில் உள்ளது. தர்மத்திற்கெதிராக செயல் புரிந்து, தீயவர்களை வதம் செய்து துாளி அம்மன் இங்கு வீற்றிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இங்கு திருவாட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று, அதற்கான விழா நடந்தது. ஜாதி மத பேதமின்றி ஊர் மக்கள் ஒன்று கூடி, பல வகையான பலகாரப் பொருட்களை படையலிட்டு திருவாட்சி திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர். விழாவில், கரகம் எடுத்தல், அம்மனுக்கு கூழ் வார்தல், பரை கட்டுதல், வாடை பொங்கல் வைத்தல், ஊர் பஜனை மண்ணடி கோவிலில் தெருக்கூத்து, வாணவேடிக்கைகளுடன் அம்மன், மண்ணடி சென்றடைதல், அம்மன் வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !